யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அவர்களில் ஊர்காவற்றுறை கடற்தொழிலாளி ஒருவரும் அடங்குவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூநகரி வலைப்பாடு பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட மெலிஞ்சிமுனையைச் சேர்ந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor