யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கோரோனா தொற்று; 88 பேர் பாற்பண்ணை கிராமத்தில்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு 1003 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

129 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

Recommended For You

About the Author: Editor