யாழ்ப்பாணத்தில் மூவரும் மன்னாரில் ஒருவரும் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 3 பேரும் மன்னாரில் ஒருவரும் கோவிட் -19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 294 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சீறுநீரகம் பாதிக்கப்பட்ட 63 வயதுடைய பெண் ஒருவர் கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் சுதுமலையில் வசிப்பவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட கொக்குவிலைச் சேர்ந்த 83 வயதுடைய பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 32 வயதுடைய பெண்ணுக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவரின் நேரடித் தொடர்புடையவர்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.

மன்னாரில் நகரைச் சேர்ந்த ஆண் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor