யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறி வாழவிரும்பும் முஸ்லிம்களிற்கான பதிவுகள்

யாழில் மீண்டும் மீளக்குடியேறி வாழ விரும்பும் முஸ்லிம் மக்களிற்கான காணி வீடமைப்பு வழங்கும் நிகழ்வு இன்று (7) யாழ் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது .

muslim

இன்று காலை 08.30 மணியளவில் இப்பதிவுகள் கிராம சேவகர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்கொள்ளப்படடன.

அத்துடன் வீடு புனரமைப்பு புதிய வீட்டுத்திட்டம் போன்ற பதிவுகளும் இங்கு மேற்கொள்வதற்கு வசதிகளை பிரதேச செயலகம் அம்மக்களிற்கு ஒழுங்கு செய்துள்ளது.

தூர பகுதிகளில் இருந்து தற்போது 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த வாகனங்கள் பேருந்துகளில் வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்களுக்கான வழிகாட்டல்களை பல்வேறு தரப்புகளும் போட்டிபோட்டுக்கொண்டு மேற்கொண்டு வருகின்றன.

Recommended For You

About the Author: Editor