யாழ்ப்பாணத்தில் உகாண்டா பாதுகாப்புச் செயலர்

ugandaaஉகண்டா நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் ஓடொன்கோ ஜெஜி, இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இரு நாடுகளுக்கு இடையில் நட்புறவினை ஏற்படுத்தும் முகமாகவே ஓடொன்கோ ஜெஜி உட்பட 6 பேர் கொண்ட குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் குழுவினரை இன்று காலை 8 மணியளவில் யாழ். கட்டளைத் தளபதி உதயபெரெரா பலாலி விமான நிலையத்தில் வரவேற்று இக் குழுவுடன் பலாலியிலுள்ள படைத் தலைமையகத்தில் விசேட சந்திபையும் மேற்கொண்டார்.

பின்னர் காலை 10 மணியளவில் ஓடொன்கோ ஜெஜி உள்ளடங்கிய குழு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து யாழ்.பொது நூலகத்தினையும் கோட்டையையும் பார்வையிட்டனர்.