யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் நேற்று அதிகாலை புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த அதி சொகுசு பஸ் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் புத்தளம் டிப்போ சந்தியிலுள்ள வீட்டின் மதிலை உடைத்துக் கொண்டு சென்று விபத்திற்குள்ளானது.