யாழ்ப்பாணத்திலும் விரைவில் பொதுபல சேனா அலுவலகம்!

Pothupala senaபொதுபல சேனா அமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று விரைவில் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பு தற்போது செய்து வருகிறது. இது தொடர்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் சிங்கள இணையம் ஒன்றுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களும் தமிழர்களும் ஐக்கியமாக ஒற்றுமையுடன் வாழ்வதற்கான திட்டமொன்றினை நாம் முன்னெடுத்துள்ளோம்.

இதன் அடிப்படையில் நாம் யாழ்ப்பாணத்தில் எமது அமைப்பின் அலுவலகம் ஒன்றினைத் திறக்கவுள்ளோம்.

இது தொடர்பான எமது “சமூக ஐக்கியக் கூட்டம்“ எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வடமாகாணத்துக்கான எமது பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor