யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இரண்டு காணிக் காரியாலயங்கள்

jaffna_kachari_newயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் புதிதாக இரண்டு காணிக் காரியாலயங்கள் நிறுவப்படவுள்ளன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு காரியாலயம் அமைக்கப்படவுள்ளது.

வடக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இவ்வாறு காரியாலயம் அமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் காணி அமைச்சின் காரியாலயங்கள் நிறுவப்பட உள்ளதாக காணி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கைகளும் இந்த காரியாலயம் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது.

Recommended For You

About the Author: Editor