யாழ்தேவி எனது புது அனுபவம்: ரயில் சாரதி

கடந்த 35 வருடங்களாக ரயில் சாரதி கடமையில் ஈடுபட்டிருக்கிறேன். இருப்பினும், யாழ்தேவி ரயில் சேவையில் இணைவது இதுவே முதன்முறையாகும். இது எனக்கு புது அனுபவமாகும் என்று 24 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கான சேவையில் ஈடுபடும் யாழ்தேவி ரயிலின் சாரதி எம்.நிமல் கூறினார்.

neemal

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ரயில் சாரதியாக நான் பல வருடங்கள் கடமையாற்றிய போதும், யாழ்தேவியின் சாரதியாக நான் கடமையாற்றியதில்லை.

தற்போது, புத்துயிர் பெற்று சேவையை ஆரம்பித்துள்ள யாழ்தேவியிலேயே எனக்கு பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. இது எனக்கு பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கின்றது.

என் தந்தை தமிழர். தாய் சிங்களவர். இவ்வாறானதொரு நிலையில், தெற்கையும் வடக்கையும் இணைக்கும் இந்த ரயில் சேவையில் கடமையாற்ற கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

யாழ்தேவி வருகை, இந்த பகுதி மக்களுக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என நம்புவதாக அவர் மேலும் கூறினார்.