வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 1/2 மணித்தியால மின்தடை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாளை வெள்ளிக்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மூளாய், சுழிபுரப் பிரதேசம், மாவடிப் பிரதேசம், கைதடி, நவபுரம், கைதடி மானிப்பாய் வீதி, ஆகிய இடங்களிலும்
26ஆம் திகதி கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, செம்மணி, பிறவுண் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, மாவடி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், வேம்படி, மனோகரா பிரதேசம் ஆகிய இடங்களிலும்
27ஆம் திகதி மந்திகைப் பிரதேசம், புலோலி, சாரையடி, ஓராம்கட்டை, தம்பசிட்டி, பருத்தித்துறைப் பிரதேசம், அல்வாய்ப் பிரதேசம், நெல்லியடிப் பிரதேசம், கரவெட்டிப் பிரதேசம், கரணவாய்ப் பிரதேசம், குங்சர்கடைப் பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி ஆகிய இடங்களிலும்
28ஆம் திகதி நயினாதீவுப் பிரதேசம் முழுவதும், அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி கிழக்கு பிரதேசங்கள், அராலி மேற்குப் பிரதேசத்தின் ஒரு பகுதி, மாலுசந்தி முதல் மடத்தடி வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.