யாழ்ப்பாணத்தின் சில பிர தேசங்களில் ஒன்பது மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வீதி அகலிப்பு பணிகளுக்காகவும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும், பதிதாக நிரமாணிக்கப்பட்டுள்ள 24 மெகா வோட்ஸ் மின்நிலையத்திற்கு மின் உபகரணங்கள் பொருத்துவதற்காகவும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 23.02.2012 சனிக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம், கரவெட்டிப் பிரதேசம், சாமியன் அரசடிப் பிரதேசம், கலிகைப் பிரதேசம், யாக்கருப் பிரதேசம், நெல்லியடிப் பிரதேச்தின் ஒரு பகுதி, மருத்துவபீடப் பிரதேசம், முடமாவடிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, பாற்பண்ணைப் பிரதேசத்திலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அத்துடன், 24.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிவரையும் புன்னாலைக்கட்டுவன், புத்தூர், ஆவரங்கால், வீரவாணி, வாதரவத்தை, ஊறணி, அச்சுவேலி, வல்லை முதல் மந்திகை வரையான வடமராட்சிப் பிரதேசம், உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பட்டணப்பகுதி நீங்கலாக யாழ் மாநகரசபைப்பகுதி, ஸ்ரான்லி வீதி, மருத்துவபீடப் பிரதேசம், முடமாவடிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, பாற்பண்ணைப் பிரதேசம், சுன்னாகம், மல்லாகம், அளவெட்டி, சிறுவிளான், பன்னாலை, தெல்லிப்பழை, மாவிட்டபுரம், கீரிமலை ஆகிய இடங்களிலும் மின் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.