யாழில் 750 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு: யாழ். அரச அதிபர்

மழை, வெள்ளம் காரணமாக யாழ்.மாவட்டத்தின் 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் நேற்று வரை 750 குடும்பங்களைச் சேர்ந்த 3265 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அந்தந்த பிரதேச செயலகங்களூடாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் மேலும் கூறினார்.