யாழில் 150 ஆவது பொலிஸ் வீரர் தினம் அனுஷ்டிப்பு

policeஉயிரை அற்பணித்து பெற்ற சமாதானத்தை பாதுகாத்து வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே நாம் இறந்த பொலிஸாருக்கு செய்யும் கௌரவமாககும். எனவே அனைவரும் சட்டம் ஒழுங்கு என்பவற்றை நிலைநாட்டி கிடைத்த சமாதானத்தை பாதுகாப்போம் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் றொகான் டயஸ் தெரிவித்தார்.

கடமையில் இருக்கும் போது அகாலமரணமடைந்த பொலிஸாரை நினைவு கூரும் நிகழ்வு இன்று நாடளாவிய ரீதியில் பொலிஸ் திணைக்களத்தினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான நிகழ்வுகள் பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் பொலிஸ் கட்டளை பணியகத்தில் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் அதேவேளை, யாழ்.மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 7.45 மணியளவில் யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது இறந்த பொலிஸாருக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் கலந்து கொண்டு யாழ். பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொகான் டயஸ் உரையாற்றுகையில்,

150 ஆவது பொலிஸ் வீரர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டடுகின்றது. கடமையில் இருக்கும் போது அகாலமரணமடைந்த பொலிஸ் வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

1864 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி மத்திய மலைநாட்டில் கேகாலை பிரதேசத்தில் உதுவன் மலை அடிவாரத்தில் சரதியல் என்னும் குற்றவாளியை கைது செய்ய சென்ற போது அவருடைய நண்பன் மம்மலே மரிக்கார் என்பவரால் சுடப்பட்டு பொலிஸ் கொஸ்தாபஸ் சபான் இறந்தார்.

அன்றைய தினத்தை நினைவு கூரும் முகமாக ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. எமது சகோதார மக்களின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் முகமாக மேலும் ஒரு சகோதரனுக்கு செய்யக் கூடிய தியாகம் என்றால் அது உயிர்த்தியாகமே.

அதன்படி 150 காலப்பகுதியில் மரணித்த நித்திய பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 3107.பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 4பேரும் , பொலிஸ் அத்தியட்சகர்கள் 8பேரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16பேரும் , பரிசோதகர்கள் 94 பேரும், உதவிப் பொலிஸ் பரிசோதகர்கள் 189 பேரும், சாஜன் மேஜர் 2 பேரும், பொலிஸ் சாஜன்கள் 172 பேரும், பொலிஸ் கொஸ்தாபஸ் 2413 பேரும், பொலிஸ் கொஸ்தாபஸ் சாரதி 10 பேரும், பொலிஸ் சாஜன் சாரதி 160 பேரும் இவர்களுடன் 15 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று நினைவு கூரப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்துக் கொண்டது தமது சொந்த தேவைகளுக்கு அல்ல. எமது நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவே.

அத்துடன் 30 வருட காலமாக நடந்த சிவில் யுத்தம் காரணமாக 2594 பொலிஸார் இறந்துள்ளனர். அத்தோடு 497பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். எனவே அவர்களையும் இந்த நேரத்தில் நாம் நினைவு கூரவேண்டும்.

எனவே இவர்கள் உயிர்த்தியாகம் செய்யாது இருந்தால் இன்று இலங்கையர்கள் அனைவரும் சமதானத்தை இவ்வளவு இலகுவாக அனுபவித்து இருக்க முடியாது.

நாளைய பொழுதை இன்றைய பொழுதுக்காக அர்ப்பணித்து பெற்றுத் தந்த சமாதானத்தை பாதுகாப்பது அனைவரது கடமையும் ஆகும். இதுவே உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு நாம் செய்கின்ற கௌரவம் ஆகும் என்றார்.

இந்த நிகழ்வில் யாழ்.மாநகரசபை மேஜர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா , 512 இராணுவ படைப்பிரிவின் அதிகாரி, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸார் அகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts