யாழில் 15 வயது சிறுமியைக் கடத்திய இளைஞன், சிறுமியுடன் பொலிஸில் சரண்

arrest_1யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய இளைஞன் சிறுமியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளார். பெணடிக் வீதியைச்சேர்ந்த 21 வயதான நபரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார்.

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே சிறுமியை செவ்வாய்க்கிழமை மாலை செம்மணி பகுதியில் வைத்து கடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த சிறுமியுடன் பொலிஸில் இளைஞன் சரணடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் சிறுமியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

இந்நிலையில் சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் இளைஞனை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்திவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

யாழில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டார்