யாழ்.ஓட்டுமடம் பகுதியில் பழைய இரும்பு விற்பனை செய்யும் இடத்தில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (07.9.2015) முற்பகல் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி கிராம சேவகர் பிரிவு ஜே-88 பிரிவில் உள்ளடங்கும் ஓட்டுமடம் ஆலடி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ஜெ.பத்மஜெகன் (வயது-28), எஸ்.சுரேஷ் (வயது-26) ஆகிய இரு குடும்பஸ்தர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது இரும்பிற்காக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளான ஆர்.பி.ஜி வர்க்கத்தை
சேர்ந்த கழிவு இரும்பினை சுத்தியலால் உடைக்கின்ற போதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் ஒருவரது இடது கையில் 3 விரல்கள் துண்டிக்கப்பட்டதுடன், உடம்பிலும் சிதறல் காயங்கள் ஏற்பட்டன.