யாழில் ரூ.6 இலட்சம் பெறுமதியான பணம், நகை திருட்டு

யாழ்ப்பாணம், பிரம்படிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை உள்நுழைந்து 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசு, நகைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்நுழைந்து, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுண் நகைகள் (420,000 ரூபாய்) மற்றும் 2 இலட்சம் ரூபாய் காசு என்பனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை (17) காலை யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அதற்கிணங்க விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.