யாழில் ரமபோச குழு: அமைச்சர் டக்ளஸ் வரவேற்றார்

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் உலங்குவானூர்திகளின் மூலம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை வந்தடைந்தனர்.

0s1

 

 

அக்குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

இக்குழுவினர், தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோசவிற்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.

 

0s2

இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் உடனிருந்தனர்.

 

0s3

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ரமபோச, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor