யாழில் மோதல்,கையை பறிகொடுத்த 18 வயது இளைஞர்

Fight Logoயாழில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் .கொண்டலடி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தகர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டில் முடிவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த ச .பிரசன்னா (வயது 18) என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் உள்ளங்கையில் பாரிய வெட்டு விழுந்து, உள்ளங்கை துண்டாடப்பட்ட நிலையில் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.