யாழில் ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம்!

இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு சார்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கு ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நகரங்களில் அமைக்கபடப்பட்டுள்ள எல்.சி.டி பனல் மூலம் திரையிடப்பட்டு வருகின்றது.

madras-cafe(1)

யாழ்ப்பாணம்,சாவகச்சேரி,சுன்னாகம்,நெல்லியடி போன்ற பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி பனல் ஊடாகவே இத்திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது.

முன்னர் அரசாங்கத்தினாலும் இராணுவத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான காணொளிகள் எல்.சி.டி பனல் ஊடாகவே ஒளிபரப்பாகியது. அதிலேயே ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.