யாழில் முதலாவது மின் தகன மயானம் திறப்பு

யாழ் மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மாயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டது.

kom-electric-sudukadu

யாழ் மாநகர சபை மற்றும் வட மாகாண சபையினால் 22 மில்லியன் ரூபா செலவில் யாழ் கொம்பயன்மணல் மயானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்தகன மாயனம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநாகர சபை ஆணையாளர் பிரணவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.