யாழில் முதலாவது ஆடம்பர தொடர்மாடி வீடுகள்!

யாழ்ப்பாணத்தின் முதலாவது ஆடம்பர தொடர்மாடி மக்கள் குடியிருப்பு தொகுதி நகர மையப் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

Thulasimadam

கச்சேரி ஒழுங்கையில் 06 மாடிகள், 36 சொகுசு மனைகள் ஆகியவற்றை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு உள்ள இக்குடியிருப்புத் தொகுதிக்கு துளசி மஹால் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இத்தொடர் மாடியை கொழும்பு பாணியில் அமைத்துக் கொடுத்து உள்ளார் தொழிலதிபர் எஸ். எம். வீரசேகர. 500 மில்லியன் ரூபாய் செலவில் துளசி மஹால் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. இதன் 75 சதவீதமான மனைகள் ஆர்வலர்களால் கொள்வனவு செய்யப்பட்டு விட்டன.

துளசி மஹாலில் சம்பிரதாயபூர்வ திறப்பு விழா கடந்த 31 ஆம் திகதி மிக கோலாகலமாக இடம்பெற்றது. பேராளர்கள் கொழும்பில் இருந்து பிரத்தியேக விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.