யாழில் மின்வெட்டு

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் 25ம், 26ம், 27ம், 29ம் திகதிகளில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறவித்துள்ளது.அதற்கமைய, 25ம், 27ம், 29ம் திகதிகளில் கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடவாவடி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப் பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களில் மின்வெட்டு இடம் பெறவுள்ளது.

மேலும், 26ம், 28ம் திகதிகளில் சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, கங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்;டி, பன்னாலை, சிறுவிளான், உரும்பிராய், ஊரெழுப் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.

இந்த மின்வெட்டானது காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலேயே இவ் மின்வெட்டு இடம்பெற வுள்ளதாகவும் மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது

Recommended For You

About the Author: webadmin