யாழில் மார்ச் மாதம் மட்டும் 5கோடி கலன்கள் குடிநீர் பாவணை

save- waterயாழ். மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 5,586,666 கலன்கள் குடிநீர் பாவணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் யாழ்.மாவட்ட முகாமையாளர் பாலசுப்பிரமணியம் தவேந்திரகுமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 15 குடிநீர் வழங்கும் திட்டங்களான வேம்பிராய், கைதடி, வல்வெட்டித்துறை, வாதராவத்தை, சுன்னாகம், காரைநகர், அனலைதீவு, நயினா தீவு, அராலி, வட்டுக்கோட்டை, மண்டதீவு, வேலணை, ஊர்காவற்துறை போன்ற நீர்வழங்கல் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த 15 திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் மட்டும் 5,586,666 கலன்கள் குடிநீர் பொதுமக்களின் பாவணைக்காக விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.