யாழில் போட்டியிடும் ஐ.ம.சு.கூ வேட்பாளர்கள் விபரம்

UPFA-logo_CIநடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் போட்யிடுகின்றன.

இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 ஆசனங்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும் லங்கா சம சமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியை சேர்ந்த சின்னத்துரை தவராஜா போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி)

சி.தவராஜா, கந்தசாமி கமலேந்திரன், ஐயாத்துரை ஸ்ரீரங்கன், சிவகுரு பாலகிருஷ்ணன், சூசைமுத்து அலெக்சாண்டர், சுந்தரம் டிவகலாலா, அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் மாஸ்ர், றுஷாங்கன், எஸ்.கணேசன், இதில் ஒரு பெண் வேட்பாளரும் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ். பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அகமட் சுபியான், சர்வானந்தன், கதிர்வேல் செவ்வேள்.

லங்கா சமசமஜாக் கட்சி

ந.தமிழழகன்

அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்

எம்.எம். சீராஸ்