யாழில் பெண்ணிடம் பணம் திருட்டு 3 இளைஞர்கள் மீது விசாரணை

Theft_Plane_Sympol-robberyயாழ். நகரில் பெண்ணிடமிருந்து பணத்தைத் திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நகரில் ஊதுபத்தி விற்கும் 3 இளைஞர்களை நகரப் பொலிஸார் பிடித்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

யாழ். பஸ் நிலையப் பகுதியில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து யாழ். நகருக்கு ஊதுபத்தி விற்கும் குறித்த இளைஞர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரம் அருகிலுள்ள பால்சாலையில் பால் குடித்துவிட்டு பெண்ணொருவர் 2000 ரூபா பணத்தைக் கொடுக்கவே கடைக்காரர் 1000 ரூபா கொடுத்து விட்டு மிகுதிப் பணத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கையில் குறித்த பெண் அந்த 1000 ரூபாவை தனது கைப்பையினுள் வைத்து விட்டு மிகுதிப் பணத்தை கடைக்காரரிடமிருந்து பெற்று மீண்டும் பைக்குள் வைக்க முயன்றபோது பையிலிருந்த 1000 ரூபாவைக் காணவில்லை.

சம்பவ நேரம் இந்த இளைஞர்களில் ஒருவர் குறித்த பெண்ணின் அருகில் நின்றிருந்த நிலையிலேயே இந்தப் பணத்தை அந்த இளைஞர் எடுத்திருப்பார் என்று நகரப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டதையடுத்தே இந்த இளைஞர்கள் மூவரையும் நகரப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor