யாழில். புதிய வர்த்தக கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு

newbulding_jaffnaயாழ். பிரபல வர்த்தகரும், சமூக சேவையாளருமான நடராசா சத்திய ரூபனினால் நிர்மாணிக்கப்பட்ட என்.எஸ்.ஆர் ரூபன் கட்டிடத்தொகுதி நேற்றயதினம் திறந்து வைக்கப்பட்டது.

இதில், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டி இக்கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவும் கலந்துகொண்டார்.

இதன்போது, உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

யாழ். மாவட்டத்தில் இதுபோன்ற பல கட்டிடங்கள் வளர வேண்டும். இதனால் மக்களின் வாழ்வு செழிப்படைந்து யாழ்.மாவட்டம் அபிவிருத்தி பாதையில் வளர்ச்சியடைய வேண்டும்.இவ்வாறான செயற்பாடுகளுக்கு யாழ்.நகர வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்கி வர்த்தகத்துறையினை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வரவேண்டும், செயற்திட்டங்களுக்கு தனது உதவிகள் எப்போதும் இருக்கும், என்று அவர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor