யாழில் புகைத்தலுக்கு எதிரான ஊர்வலம்

dont-smoke-25316சுகாதார அமைச்சின் 101 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள் இணைந்து ‘புகை எமது வாழ்வுக்கு பகை’ என்னும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று நடத்தவுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவினர் தெரிவித்தனர்.

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்திற்கு முன்னாலுள்ள தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இந்த ஊர்வலம் மல்லாகம் சந்தியினூடாக சுன்னாகம் பேரூந்து நிலையத்தினைச் சென்றடையவுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் தெல்லிப்பளை, உடுவில் பிரதேச செயலகங்களின் அலுவலர்கள், பிரதேச சபைகளின் அலுவலர்கள், சிவத்தொண்டன், சிவமங்கையர் கழக அமைப்புக்கள் பிரதிநிதிகள், வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக வைத்தியதிகாரி பிரிவினர் மேலும் தெரிவித்தன.