யாழில் பிரபல போதைப் பொருள் விநியோகஸ்தர் ஒருவர் கைது

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை யாழ். நகரில் வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவரான இவர் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தின் தலைப்புள்ளி என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இவர் திங்கள் நண்பகல் கைதுசெய்யப்படும்போது விநியோகதிற்காக கொண்டுவந்திருந்த 200மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் இவருடைய பெயர், விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளதுடன், இவருடன் தொடர்பிலிருக்கும் முக்கிய போதைப்பொருள் கொள்வனவாளர்களை கைது செய்ய பொலிஸ்பிரிவொன்று களமிறக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

யுத்தத்தின் பின்னர் யாழ்.மாவட்டத்தில் மோசமான குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றமைக்கு மிதமிஞ்சிய போதைப்பொருள் பாவனையே காரணமாகும்.

இதேபோல் இவ்வாறு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் முக்கிய சூத்திரதாரிகள் முஸ்லிம் வர்த்தகர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor