யாழில் பிரதான ரயில் நிலையங்கள் புனரமைப்பு

யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

train-navatkuly

ஒக்ரோபர் மாதம் கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

train-navatkuly-1

இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது.

ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல் எல்லையினை ஊடறுத்துச் செல்லும் பாலத்தின் நவீன தோற்றத்துடனும் இது அமைக்கப்பட்டுள்ளது.

train-navatkuly-2