பாரதியார் நினைவுதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்திருக்கும் பாரதியார் சிலையானது இளைஞர்களால் சுத்திகரிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு சுட்டி விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பாரதியார் உருவம் பொறிக்கப்பட்ட மேலாடைகளுடன் தனி நபர்களாக முன்னின்று பாரதியாரை நினைவுகூர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நினைவாக இலவசமாக பொது மக்களுக்கு மரக்கன்றுகளையும் இளைஞர்கள் வழங்கியுள்ளார்கள்.
இவ்வாறான நடவடிக்கைகளில் இக்கால சந்ததியினர் ஈடுபடுவது தமிழின் பெருமைக்குரிய விடயமாகும் என அங்கிருந்த மக்கள் கருத்து தெரிவித்தார்கள்.