இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் கடலேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மண்டைதீவுக்கு அண்மித்த கடலேரி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் சாரதி உட்பட பஸ்ஸில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளனர்.
ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து, மண்டைதீவு பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து கடலிற்குள் பாய்ந்துள்ளது.
இதனால், பேருந்து நொருங்கியதுடன், பேருந்தில் பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.