யாழில் பதற்றம்! வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை!

யாழ்.ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

தேடுதலின் தொடர்ச்சியாக அங்கு பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டும் வீதி தடை போடப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார்.

தான் முட்டை பல்ப் (மின்குமிழ்) முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.

எனினும் வாடகைக்கு குடியமர்ந்து சில மாதங்கள் ஆகிய போதும் அவர் மின்குமிழ் வியாபாரத்தில் ஈடுபடவில்லை என வீட்டு உரிமையாளரால் சந்தேகிக்கப்பட்டது.

அத்துடன், அவரிடம் பல கார்களிலும் வாகனங்களிலும் புதுப் புது நபர்கள் வந்து செல்வதையும் வீட்டு உரிமையாளரும் அயலவர்களும் கண்டு சந்தேகம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடாத்தப்பட்டதை அடுத்து குறித்த இளைஞரின் நடாமாட்டம் தொடர்பில் அச்சம் கொண்ட சிலர் இது குறித்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலின் அடிப்படையிலேயே மேற்படி சுற்றிவளைப்பு தேடுதர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் இத் தேடுதல் நடவடிக்கையில் நேற்று இரவுரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts