யாழில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக யாழ் மாவட்ட மக்களிடம் இருந்து சிவமானிட விடியற்கழகம் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் புதன்கிழமை அங்கு கொண்டு சென்று விநியோகிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிவமானிட விடியற் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருகினால் பாதிக்கப்பட்ட மக்கள் உடமைகளை இழந்து நிர்க்கதியாக இருப்பதுடன் தொற்று நோய்த் தாக்கத்திற்கும் உள்ளாகும் அபாய நிலையில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க உதவ வேண்டியது எமது அனைவரினதும் தலையாய கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில் இந்த மக்களுக்க உதவுவதற்காக சிவமானிட விடியற்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உதவிகளை வழங்க விரும்புவோர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள கல்லூரி விதியில் அமைந்துள்ள இராஜபரமேஸ்வரி மனிதவள்மேம்பாட்டு மையத்திலோ அன்றி கந்தர் மடம் குமாரசுவாமி வீதியில் அமைந்துள்ள வேதாந்த மடத்திலோ எதிர்வரும் செவ்வாயக்கிழமைக்கு முன்னர் வழங்கி உதவுமாறும் அக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor