யாழில் நாய் குரைப்பதற்கும் தடை?

நாய் குரைப்பதற்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவினைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் நீர்ப்பாசண திணைக்களத்தின் பொறியியலாளாராக கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகின்றார்கள்.

German shephard dog laying

இவர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் தொடர்ந்து குரைப்பது தமக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்துகின்றதாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின் போது- அயல் வீட்டில் உள்ள அல்சேஷியன் நாய் குரைப்பது தமக்கு அசௌகரியமாக இருக்கின்றது என அந்த வெளிநாட்டவர் தெரிவித்துள்ளார்.

நாய் வளர்க்கும் வீட்டு உரிமையாளர் நாய் வீட்டிற்கு பாதுகாப்பாக வளர்க்கின்றோம். நாய் குரைப்பது இயல்பான ஒரு செயற்பாடு அதற்காக நாயை குரைக்க வேண்டாமென சொல்ல முடியாது. தடுக்கவும் முடியாது என கூறினார்கள்.

அதற்கு அந்த வெளிநாட்டவர்கள் குரைக்காமல் இருக்கும் நாயை வளர்க்குமாறும்- அவ்வாறு குரைக்காமல் இருப்பதற்கு நாய்க்கு பழக்குமாறும் அவர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு முன்பாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர் கூறியதை கேட்ட யாழ்ப்பாணத்து பொலிஸார் வீட்டு உரிமையாளரை நாயை விற்குமாறு பணித்துள்ளனர். வீட்டிற்கு பாதுகாப்பு தருமாறு- வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாரிடம் கேட்டதற்கு பாதுகாப்பு தருவது பொலிஸாரின் கடமை அல்ல எனவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் நாயை விற்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அவ்வாறு விற்காவிடின் குறித்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நேரிடுமென்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor