யாழில் நான்கு நாட்களுக்கு 9 மணித்தியாலயம் மின் தடை

powercutவீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் 13.01.2013 ஞாயிற்றுக்;கிழமை, 15.01.2013 செவ்வாய்க்கிழமை, 16.01.2013 புதன்கிழமை மற்றும் 17.01.2013 வியாழக்கிழமை ஆகிய தினங்களில் 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் நயினாதீவு பிரதான வீதிப் பிரதேசத்திலும் மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

13.01.2013 ஞாயிற்றுக்கிழமை, 15.01.2013 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் கரணவாய் அண்ணாசிலையடிப் பிரதேசம், மாலு சந்தி முதல் துலாக்கட்டு மடத்தடி வரையான பிரதேசம், சாமியன்அரசடி முதல் சம்மந்தர் கடை வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும்,

16.01.2013 புதன்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி, வட்டு இந்துக் கல்லூரிப் பிரதேசம், மாவடி, துணைவி, அராலிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும், 15.01.2013 செவ்வாய்க்;கிழமை, 17.01.2013 வியாழக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் உரும்பிராய், ஊரெழுப் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும், மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை பொறிலியலாளர் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor