யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
ஏழாலை பகுதியில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் (16) இரவு சென்ற குறித்த பெண் , வீட்டின் வளாகத்தினுள் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனை அவதானித்த வீட்டில் இருந்தோர் தீயினை அனைத்து காப்பாற்றிய போதிலும் , அவர் கிணற்றினுள் குதித்துள்ளார். கிணற்றில் இருந்து காப்பாற்றி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (17) உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.