Ad Widget

யாழில் தந்தை செல்வாவின் பிறந்த தின நிகழ்வு

chelvanayagam-selvaஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் அமரர் தந்தை செல்வநாயகத்தின் 115 வது பிறந்த நாள் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நேற்றய தினம் காலை 9 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இவ் பிறந்த தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ சரவணபவன், சுமத்திரன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர், பிரேத சபை ,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts