தந்தை செல்வா அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 116ஆவது ஜனனதினம், தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
தென்னிந்திய திருச்சபையின் ஆயர் எஸ்.ஜெபநேசன் அடிகளார் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா.சங்கையா ஆகியோர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் மற்றும் தந்தை செல்வாவின் பேரன் இராஜநாயகம் ஆகியோர் சமாதிக்கு மலர் தூவி தந்தை செல்வாவின் ஜனன தினத்தினை அனுஷ்டித்தனர்.
இந்நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர்கள், தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஜனனதினத்தினை அனுஷ்டித்தனர்.
தந்தை செல்வா 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி ஜனனித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.