யாழில் சு.க.வின் முதலாவது பிரசார கூட்டம்

SLIP-meeting-kmallakamஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தனது முதலாவது பிரசார கூட்டத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்தியது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, மல்லாகம் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முக்கணியின் கட்சி அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்ட நிலையில் இந்த பிரசார கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த அலுவலக திறப்பு விழாவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தயா மாஸ்டர், சட்டத்தரணி றெமிடியஸ் உட்பட யாழ். மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

Recommended For You

About the Author: Editor