யாழில் சுவாமி விபுலானந்தர் விழா

Vipulananthar-vilazhமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் ஆகில இலங்கை இந்து மா மன்றமும் இணைந்து நடத்தும் சுவாமி ‘விபுலானந்தர் விழா’ நேற்று திங்கட்கிழமை யாழில் நடைபெற்றது.

நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் ஆறு திருமுரகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் வே.மகாலிங்கம் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் விபுலானந்தரின் வாழ்கை வரலாறு தொடர்பான சிறப்பு பேருரையினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வழங்கினார்.

‘இந்து ஒளி’ சிறப்பிதழ் என்னும் காலாண்டு சஞ்சிகையும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூலினை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் நீலகண்டன் வெளியிட்டு வைக்க யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் வே.மகாலிங்கம் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கணினிகளும், இந்து நிறுவனங்களுக்கு மேசைக் கணனிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் வே.மகாலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பேராசிரியர் சிவலிங்கராசா, நல்லை ஆதினகுருமுதல்வர், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.