17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் சஜீவன் (17) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 07.00 மணிக்கு வெளியில் போய்விட்டு வருவதாக கூறி சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.