யாழில் சித்த மருத்துவ கண்காட்சி

kankadsiவடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்த மருத்துவக்கண்காட்சியும் மாநாடும் நேற்று திங்கட்கிழமை யாழில் அரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தூர் நவற்கிரிப் மூலிகைத் தோட்ட வாளகத்தில் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சியை வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆரம்பித்து வைத்தார்.

மனித வாழ்வில் சித்த மருத்துவத்தின் தேவையை விளக்கும் 25 மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு பல்வேறு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த கண்காட்சியை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்களுக்கான விசேட மாநாடும் நடைபெற்று வருகின்றது.

இந்த மாநாட்டின் போது சித்த மருத்துவத்துறையில் சேவையாற்றிய இருவர் கௌரவிக்கப்ட்டுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் நாளைய தினம் சித்த மருத்துவத்துறை அமைச்சர் வருகை தரவுள்ளதாக வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் தெரிவித்துள்ளது.