வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து, தமிழ் சிங்கள புத்தாண்டு கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளை புதன்கிழமை காலை 7 மணி முதல் யாழ். நல்லூர் முத்திரைச் சந்தி சங்கிலியன் பூங்காவில் நடத்தியது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலன்டின் கலந்து கொண்டார்.
சைக்கிளோட்டம், மரதனோட்டம், தலையணைச் சண்டை, கயிறு இழுத்தல், சறுக்கு மரம் ஏறல், கபடி போன்ற விளையாட்டுக்களும், சிங்கள – தமிழ் கலாசாரங்களை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்களும், பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.