யாழில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – க.மகேசன்

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற போக்கு சற்று குறைவடைந்து காணப்படுகின்றது .

யாழில் நேற்று 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 ஆயிரத்து 944 பேர் மாவட்டத்தில் இன்று வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இறப்புக்களை பொறுத்தவரை 274 ஆக அதிகரித்துள்ளது அதேநேரம் 5641 குடும்பங்கள் யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor