யாழில் கைதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன!!, இதுவரையில்25 பேர் கைது செய்துள்ளோம்; ரி.ஐ.டி தகவல்

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை யாழ்பபாணத்தில் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சந்திரா வாகிஸ்த பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளாக இருந்தவர்களும், விடுதலைப் புலிகளுடன் இணைந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய் மற்றும் புதனில் கோப்பாய், சாவகச்சேரி, உரும்பிராய் ஆகிய இடங்களில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றய தினம் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்படுவதற்கான ஆவணங்கள் கைதிகளின் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை 7 பேரின் கைது தொடர்பிலும் புதன்கிழமை கோப்பாய், பொலிகண்டி மற்றும் இளவாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பேருடைய முறைப்பாடும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கைது செய்யப்பட்டவர்களது எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Related Posts