யாழில் கைக்குண்டு வீச்சு

யாழ், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். நிசாந்தனின் வீட்டை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசியுள்ளனர்.

யாழ். வைமன் வீதியிலுள்ள இவரின் வீட்டை இலக்கு வைத்தே இனந்தெரியாத நபர்களினால் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

எனினும் இந்த கைக்குண்டு மரத்தில் பட்டு வெடித்தமையினால் முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கோ அவரின் வீட்டுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, மாநர சபை உறுப்பினராக இருந்த சமயத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து வந்த நிஷாந்தன், பின்னர் அதிலிருந்து விலகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி தலைவராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor