யாழில் கண்கவர் நிகழ்வுகளுடன் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்

உலக சுற்றுலா தினம் வடமாகாண சுற்றுலா துறை அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

இத்துடன் சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் புகையிரத வீதியில் இருந்து காலை 9 மணியளவில் வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது.

பின்னர், யாழ். வைத்தியசாலை வீதியூடாக சென்று கே.கே.எஸ் வீதியூடாக பண்ணைவரை சென்று நிறைவடைந்தது.

தனியார் சுற்றுலா நிறுவனங்களையும் இணைத்து இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் அழிவடைந்துவரும் மயிலாட்டம், குயிலாட்டம், கரகாட்டம், தமிழர் பாரம்பரிய இன்னிசை, பழங்காலத்து வாகனங்கள் ஆகியன இடம்பெற்றன.

இதன்போது சுற்றுலா மற்றும் சுற்றுலா தொடர்பான கற்றை நெறிகள் தொடர்பாக மக்களுக்கு தெளிபடுத்தபட்டது.

இதன் நிறைவில் வடமாகாணத்திலுள்ள சுற்றுலாத்துறைகளை அடையாளப்படுத்தும் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கான கையேடொன்றும் முதலமைச்சரினால் வெளியிட்டுவைக்கப்பட்டது.

முதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், சுற்றுலாத்துறை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts