யாழில் கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- வேலணை பகுதியினைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் .

சுன்னாகத்திலுள்ள ஆலயமொன்றுக்கு கணவனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமுற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor