யாழில் கடைகள் உடைக்கப்பட்டு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளை!

jaffna_shop_003யாழ்.முனியப்பர் வீதியில் நடைபாதை கடைகள் உடைக்கப்பட்டு சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்றிரவு இந்தக் கடைகள் யாவும் உடைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில் மேலும் 5 கடைகள் உடைக்கப்பட்டுள்ள அதேவேளை உடைக்கப்பட்ட கடைகளிலிருந்து பொருட்களை திருடர்களால் கொண்டு செல்ல முடியாமல் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

கடைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபாதை வியாரிகள் ஒரு நாள் அடையாள கடையடைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் யாழ்.நகரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.