யாழில் ஓரளவு மழை : வளிமண்டலவியல் திணைக்களம்

யாழ்மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மேற்கு , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

ஊவா மாகாணத்தின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரையோர பகுதிகளின் பல பகுதிகளில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Related Posts